சிறுதானிய வகைகளுள் வரகும் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக உள்ளது.
வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வரகரிசி மூலம் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.
உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய உணவுபொருட்களை சாப்பிடுவது அவசியம். வரகரிசியில் இத்தகைய நார்சத்து கொண்ட கொழுப்பை கரைக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.