தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.
வெந்நீர் அருந்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும். உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.