எளிதில் கிடைக்கூடிய பப்பாளியில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...!

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி,  மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.
பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.
 
நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். இளமைப்  பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வரக் கல்லீரல் வீக்கம்  குறையும். உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும்.
 
உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து  விடுபடலாம்.
 
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
 
பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்