கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை நன்றாக வளரச் செய்யும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல எல்லா பலத்தைத் தரும்.
முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.
இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின் B, வைட்டமின் B2, வைட்டமின் C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளனன. இந்தக் கீரையை சமையலில் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டுவந்தால் இரும்புச் சக்தி குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும். அத்துடன் பெண்களுக்கு வரும் சோகை, காமாலை, உப்புச் சத்துக் குறைபாடு போன்ற நோய்களும் குணமாகும்.