அடிக்கடி கொய்யா பழங்களை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா....?

வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.


கொய்யாப் பழத்தில்  வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
 
நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
 
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.
 
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.
 
தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்