இரும்பு சத்துக்கள் ஏராளமாக உள்ள கீரை எது தெரியுமா...?

திங்கள், 7 மார்ச் 2022 (11:57 IST)
பசலைக்கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது.


பசலைக்கீரையில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்து உள்ளது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.

பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ஏ, பி, சி ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.

வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன.

பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது. குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது. மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன.

தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்