மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கணை சூடு, இருமல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மணத்தக்காளி வற்றலை நெய்யில் வறுத்து சாப்பிட நீர்க்கடுப்பு, உட்சூடு ஆகியவை குணமாகும்.