ஒருநிமிஷம் கழித்து அந்த தண்ணீரைச் சாய்த்து வெளியேற்றிவிட்டு, மறுபடியும் புதிய தண்ணீர் விடவேண்டும். இந்த விதமாக மூன்றுமுறை விட்டு வந்தால் காதிலுள்ள பூச்சி வெளியேறிவிடும், அல்லது இறந்துவிடும், வேதனை நின்றுவிடும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் கொஞ்சம் உப்பு, அதே அளவு வெங்காயம் அதே அளவு சுடுசோறு இவைகளை அம்மியில் வைத்து, அரைத்து நகச்சுற்றுள்ள விரலில் வைத்துக்கட்டி விடவேண்டும். இந்தவிதமாகக் கட்டினால் வேதனை குறையும், எப்படியிருந்தாலும், நகத்தின் உள்ளே இருந்துவரும் சிறு கொப்புளம், மறுபடி உள்ளே செல்லும்வரைச் செய்ய வேண்டும். இதனால் வலி ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.