என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது வெந்தயக் கீரையில் தெரியுமா...?

சனி, 8 ஜனவரி 2022 (09:24 IST)
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல்வேறு முறைகளில் சமைத்து உண்ணலாம்.

வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஜீரண கோளாறுகளை சரி செய்யும். பசியைத் தூண்டும். இருமல் குணமாகும். நாவறட்சி நீங்கும்.கண்பார்வை தெளிவடைய செய்யும்.
 
வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும். இக்கீரையில் தேங்காய் பால், முட்டை சேர்த்து குருமா தயாரித்து நெய்யில் தாளித்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும். 
 
வெந்தயக் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் வாய்ப்புண் குணமாகும்.
 
இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
தொடர்ந்து இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் பலப்படும் தசை நார்களும் நரம்புகள் பலப்படும். வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
 
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்