இயற்கையான முறையில் சருமத்தை பொலிவு பெறச்செய்யும் ஆப்பிள் ஃபேஸ் பேக்...!

பழங்கள் கொண்ட பேஸ்பேக் பயன்படுத்துவதால் சருமத்திற்கு மிகச் சிறந்த நன்மை கிடைக்கிறது. பழங்கள் குறிப்பாக அழகு சிகிச்சையில்  தனித் தன்மைக் கொண்டது.
நச்சுகள் மற்றும் கழிவுகளால் சருமம் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க  உதவுகிறது. 
 
சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதைத் தடுக்க உதவுகிறது. சருமத்தைப் பரமாரிக்க உதவுகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் குறைபாடால் உண்டாகும் பல்வேறு சரும பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. 
 
பருக்கள் உடைவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்ற உதவும் ஆப்பிள் பேஸ்  பேக் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
 
* ஆப்பிளை தோல் உரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். கூடுதலாக இந்த கலவையில் ஜாதிபத்திரி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை சேர்த்துக்  கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். பிறகு முகத்தைக் கழுவவும்.
* ஆப்பிளை தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை நன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த  விழுதுடன் அரை கப் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  முகத்தைக் கழுவவும்.
 
* அரை ஆப்பிள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சோளமாவு மற்றும் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும்  விழுதாக்கி முகத்தில் தடவவும். இது ஒரு ஸ்க்ரப் போல் செயல்பட்டு முகத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்கி, சருமத்தை தளர்த்துகிறது.  இதனால் சருமம் பளபளப்பாக மாறுகிறது.
 
* ஆப்பிள் ப்யுரி மற்றும் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை கலந்து, இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு  வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதனால் சருமம் தளர்ந்து புத்துணர்ச்சி பெறும்.
 
* புதிதாக வாங்கிய ஆப்பிளை தோல் சீவி வேக வைத்து மசித்து விழுதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு முகத்தைக்  கழுவவும்.  இந்த விழுதுடன் சிறிதளவு பால் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்