சாப்பிட்டவுடன் இந்த செயல்களை செய்யவே கூடாது அவை என்ன...?

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.
 
உணவருந்திய பிறகு ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
 
சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது  உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
 
சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும். 
 
சாப்பிட்டவுடன் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 
உணவருந்திய பிறகு இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்