சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த செவ்வாழை !!

சனி, 25 ஜூன் 2022 (11:22 IST)
ஆரோக்கிய  நன்மைகள் அடங்கிய செவ்வாழைப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்  மற்றும் மருத்துவ குணங்கள்  நிறைந்தது, உடனடி ஆற்றலை கொடுக்க கூடியது  செரிமானத்தை சீராக்கும்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  


சிவப்பு வாழைப்பழத்தில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது இரத்த ஓட்டத்தில் சீராக வெளியிடப்பட்டு உடலுக்கு  உடனடி ஆற்றலை வழங்குகிறது.

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளது, உடலில் எலக்ட்ரோலைட்(நீர்சத்து) சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

செவ்வாழைப்பழம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது. பழத்தில் உள்ள நார்ச்சத்து  குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது.

மஞ்சள் வாழைப்பழங்களை விட சிவப்பு வாழைப்பழங்களில் அதிக பீட்டா கரோட்டின், வைட்டமின் பி‌6 மற்றும் வைட்டமின் சி உள்ளது, செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6 வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது. நோய்கிருமிகள் மூலம் தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.

சிவப்பு வாழைப்பழத்தில் வைட்டமின் பி-6 அதிகமாக உள்ளது, இது ஹீமோகுளோபின் எண்ணிக்கை மற்றும் இரத்தத்தின் தரத்தை அதிகரிக்கிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க தினமும் குறைந்தது 2-3 வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்