நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.
தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.
நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.
பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வுக்கு ஒரு குட்பை சொல்லலாம்.