தினமும் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!
இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இதைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். முக்கியமாக ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்தால் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும்.
பொலிவான சருமம் வேண்டுமானால், அன்றாடம் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவ வறட்சி தடுக்கப்பட்டு, ஈரப்பசை தக்க வைக்கப்படும்.
இரவில் படுக்கும் முன் காட்டனில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, உதடு, கண்கள் மற்றும் தேவையான இடங்களைத் துடைத்து எடுங்கள். இதனால் எளிதில் மேக்கப் நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், முகப்பருக்களைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் எண்ணெய் பசை உற்பத்தியை அதிகரிக்காமல் தடுக்கும்.
தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். கால்களில் உள்ள முடியை நீக்கும் முன், தேங்காய் எண்ணெய் சருமத்தில் தடவிக் கொண்டு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு, முடியும் எளிதில் வெளிவரும்.
தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும்.