கொத்தமல்லியை ஜூஸ் செய்து குடித்தால் என்ன பலன்கள் தெரியுமா...!

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க  உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.
கொத்தமல்லி ஜூஸ்:
 
கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் ஊற்றி கழுவி பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை  சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார்.
 
பலன்கள்:
 
கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக்  கூடியது.
 
கொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். இரத்த சோகை  இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த  அழுத்தம் குறையும்.
 
செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்