உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் கொத்தமல்லி ஜூஸ் !!

கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். இரத்த சோகை மற்றும் இரத்த  அழுத்தம் இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். 
 
செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
 
கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக்  கூடியது.
 
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்