இயற்கையான முறையில் பலனை தரக்கூடிய அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...!!

நகங்களை பராமரிக்க பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு உடைவதும் குறையும். பாதாம் எண்ணெய்யை நகத்தில் தடவி வர நகங்களுக்கு பளபளப்பு கிடைக்கும்.
முகத்தை பராமரிக்க நன்கு பழுத்த பப்பாளி பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, கழுவினால், முகம் பொலிவு பெறுவது உறுதி.
 
கழுத்து பகுதி கருத்து காணப்படுவதை பராமரிக்க, சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச் சாறு, ஆலிவ் ஆயில் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசி, பத்து நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்வதால் நாளடைவில் கழுத்து  கருமை நீங்கி பளபளக்கும்.
 
சருமத்தை பராமரிக்க ஒரு ஸ்பூன் ஈஸ்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.
கண்ணை சுற்றி காணப்படும் கருவளையத்தை நீக்க, வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து, கருவளையம் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
 
முகத்தில் காணப்படும் கருப்பு திட்டுகளை போக்க ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து அரைத்து கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் விரைவில் மறைந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்