இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க...!

மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான  இருக்கும்.
மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித  உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற  உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.
 
எப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு  செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான  முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம்.
 
தேவையானப் பொருட்கள்:
 
பசலைக் கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
வறுத்த ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன். 
 
ஜூஸ் செய்முறை:
 
ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும். 
 
இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பை கரைத்து  இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
 
இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த  ஓட்டத்தை சீராக்கும்.
 
பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில்  உள்ளது. பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்த  ஓட்டத்தை சீராக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்