சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கபட்டை !!

திங்கள், 7 மார்ச் 2022 (13:49 IST)
நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் இலவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. வாய்துர்நாற்றம் நீங்க அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய்துர்நாற்றம் நீங்கும்.


எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக்கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும்.

அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து  சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சளித் தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காசநோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்ற வைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

சிலந்திக்கடி மற்றும் விஷப்பூச்சிகள் தாக்கினால் இலவங்கப் பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும்.   வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேன்கலந்து காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

இலவங்கபட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால்பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவுநோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்