நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.
தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.