முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும். முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.
ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும். உடல் எடையைக் குறைக்க உதவும். வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முள்ளங்கி சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஏனெனில் முள்ளங்கியில் உள்ள அந்தசர்னின் இதய நோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது.