புற்று நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய். வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும்.
நிலக்கடலையில் மாங்கனீசு கால்சியம், ஆண்டி ஆக்சிடண்ட், வைட்டமின் இ, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
கடலை எண்ணெய்யில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.
நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.