மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை போன்றவை காரணமாக இது வருகின்றது.
கொய்யா இலைகளை நன்றாக நசுக்கி, ஜூஸாக்கி வாய்ப்புண்ணுக்காக குடித்துவர, அது உங்கள் புண்ணை விரைவில் போக்கி நலம் பெற உதவுகிறது.
1 டீ ஸ்பூன் சமையல் சோடாவை அரை கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு 3லிருந்து 4 முறை சில துளசி இலைகளை மென்று அதன் பின்னர் தண்ணீர் குடித்துவர, வாய்ப்புண் பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும். உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும்.