அன்றாட உணவில் ப்ராக்கோலியை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது உறுதிக்கும் சத்து அவசியம் தேவை எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகளை பலப்படுத்தி மூட்டு வலிகளில் இருந்து தீர்வளிக்கிறது.

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது இதனால் இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
ப்ரோக்கோலியில் இதயத்தின் வலிமையை அதிகரிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன அது மட்டுமல்ல ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட் இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.
 
ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி அது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும் அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விட்டமின் சி மிக முக்கியம் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .
 
ப்ரோக்கோலியில் நச்சுத்தன்மையை நீக்கும் சல்பர் கூட்டுப் பொருட்கள் அதிகம் உள்ளன எனவே ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி உடல் தூய்மை பெறும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்