இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும்.
புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.
குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.