எடை, உடல் பருமன், தொந்தியை குறைக்க விரும்புவோர் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கரிசலாங்கண்ணியில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலை உணவாகவும் எடுத்துக் கொண்டால் நல்லது.
கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவர் அவர் இல்லத்தில் அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு தைலமாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், உடம்பில் பித்தத்தை சரிசெய்து, தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் இளநரையையும் சரிசெய்யும்.
இரத்த சோகை, காமாலை முதலியவற்றை கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தும், பித்த நீர் பெருக்கியாகவும், மலம் இளக்கியாகவும் செயல்படும்.