தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

திங்கள், 28 மார்ச் 2022 (11:20 IST)
தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு சத்துக்கள் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது.


தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலங்கள் நமது இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபடுத்துவதோடு உடலில் பரவி உள்ள நுண் கிருமிகளையும் அழித்து உடலை தூய்மையாக வைக்கிறது.

சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது.

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது.

தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

கோடைக்காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தேங்காய் ஒரு சிறந்த நீர்ச்சத்தை வழங்கும் ஒரு உணவாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்