நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ள ப்ரோக்கோலியின் பயன்கள் !!

திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:15 IST)
மலச்சிக்கல், செரிமான பிரச்சனை கொண்டவர்களுக்கு ப்ராக்கோலி சிறந்து மருந்தாக இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது.


வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

ப்ரோக்கோலியை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் புத்துணர்ச்சி, இளமை தோற்றம் ஆகியவற்றை ப்ரோக்கோலியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்கள் நமக்கு தருகிறது. மேலும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது.

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, அதில் பல நார்ச்சத்து நீரில் கரையகூடிய தன்மை கொண்டது.

இந்த நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.

தினமும் ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 6 சதவிகித தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து வெளியேறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்