செலரியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். செலரியில் ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கும் உட்பொருள்கள் ஏராலமாக உள்ளது.
ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், செலரியை கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.
செலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சியைத் தடுக்கும். மேலும் இதில் கல்லீரல், சருமம், கண்கள் மற்றும் அறிவாற்றல் திறன் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளும் அதிகம் உள்ளது.
செலரியை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுத்து அழித்து, மார்பக புற்றுநீயின் அபாயத்தைத் தடுக்கும்.
அன்றாடம் செலரியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், உடலினுள் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைத்து, pH அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.