சீன உப்பு அல்லது எம்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளூடாமேட் நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளில் எல்லாம் கலந்திருக்கும் முக்கியமான கலவையாகும். முன்னதாக இந்த சீன உப்பை சைனீஸ் உணவுகளில் மட்டுமே கலக்கப்பட்டு வந்து. ஆனால், இன்றைய நாட்களில் சீன உப்பு கலக்காத உணவுகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது.
சீன உப்பினால் மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.
சீன உப்பினால் உயர் இரத்த அழுத்தம், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு நோய், உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.