கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

சனி, 2 ஏப்ரல் 2022 (18:09 IST)
கத்திரிக்காயில் கொலஸ்ட்ரால் இல்லை, கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகள் மிகக் குறைவு.நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காயை உட்கொள்வது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுவதைத் தடுக்கிறது.


கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது.

கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளன, இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க கத்தரிக்காயின் நன்மைகளை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  கத்தரிக்காய்களில் பினோலிக் சேர்மங்கள் உள்ளன. கத்தரிக்காய்களில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  

வறுத்த கத்தரிக்காய் சுவை நன்றாக இருக்கும் ஆனால் அவை நிறைய எண்ணெய்யை உறிஞ்சிவிடும். எனவே வேகவைத்த கத்தரிக்காயை உட்கொள்வது பயன் தரும்.

கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்