வயிறு உப்புசம், வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் குணமாகும்.
இந்த ஏலக்காய் பானம் செய்ய ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் 4 ஏலக்காய்களை உடைத்து தண்ணீரில் சேர்க்கவும். 1 நிமிடம் கொதித்த பிறகு பானத்தை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் படுக்கைக்கு செல்லும் முன்னர் குடியுங்கள். இது தூக்கத்தை தூண்டும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். கூடவே உங்கள் உடல் எடையை குறைக்கும்.
வாய்ப்புண், பற்சொத்தை, பல்வலி, பல் ஏறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண், பல்வலி போன்றவை குணமாகும்.