கபம் சார்ந்த பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் திப்பிலி !!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:35 IST)
திப்பிலிக்கு கோழையறுக்கி, சரம், சாடி, துளவி, மாகதி, கனை, ஆர்கதி, உண்சரம், உலவை நாசி, காமன், சூடாரி, கோலகம், கோலி, தண்டுலி, கணம், பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து போன்ற வேறு பல பெயர்களும் உள்ளன.


சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் சித்த மருத்துவத்தில் “திரிகடுகம்” என அழைக்கபடுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உருவாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றும்.

உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழுநோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் திப்பிலி பயன்படுகிறது.

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமான திறன் அதிகரிக்கும்.

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்