கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற உதவும் அழகு குறிப்புகள் !!

சனி, 30 ஜூலை 2022 (17:39 IST)
சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் கறிவேப்பிலை பொடி கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து குளித்தாள், கூந்தல் வளர்ச்சி தூண்டப்பட்டு முடி கருமையாக வளரும்.


செம்பருத்தி இலைகளை விழுதாக அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு குளித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

நான்கு சின்ன வெங்காயம், ஒரு கைபிடி கறிவேப்பிலை இரண்டையும் விழுதாக அரைத்து, இதில் கெட்டித் தயிர் சேர்த்து தலைக்கு தேய்க்கவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால் தலைமுடி நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதி வரும் வரை காய்ச்சி இறக்கவும். இந்த எண்ணெயை வடிகட்டி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

வெந்தயத்தை 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து இதை நைசாக அரைத்து தலைக்கு தேய்த்து ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். மேலும் உடல் குளிர்ச்சி பெறும்.

கருமையான நீளமான கூந்தல் என்பது எல்லா பெண்களின் விருப்பமாக உள்ளது. முடிக்கு அழகே கருப்பு நிறம்தான். கருமையான அடர்த்தியான கூந்தலை பெற சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்