ஏராளமான சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ள பாதாம் !!

சனி, 30 ஜூலை 2022 (16:47 IST)
பாதாமில் ஏராளமான சத்துக்களும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. இதில்  அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி-6 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.


பாதாமில் அதிக அளவு ப்ரோடீன் சத்துக்கள் உள்ளது. உடலின் வளர்ச்சி, ஆரோக்கியமான சருமம், முடி, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு புரத சத்து மிக மிக முக்கியம்.

பாதாமில் அதிக அளவு வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் உடல் விரைவில் வயதாவதை தடுக்க உதவுகின்றது.

பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக மிக அவசியம். பாதாமில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும்.

பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவுக்கு நார்சத்து உள்ளது. இவை உங்களின் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மலசிக்கல் பிரச்சினையை, முற்றிலுமாக தடுக்க உதவுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்