கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து காலை மாலை என இருவேளை உண்டுவர நீரழிவு நோய், களைப்பு, அதீத தாகம், தேக எரிச்சல் குணமாகும்.
இந்த ஜெல்லை அதிகாலை வேளையில் சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீத கழிச்சல் குணமாகும். விந்தானது கட்டும். மூலநோய் குணமாகும். ஆண்மை பெருகும். நீர்கடுப்பு, உடல்சூடு, உடல் எரிச்சல் சரியாகும்.
விந்து முந்துதல், நீர்த்துப்போன விந்துவை கட்டுப்படுத்தும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. ஆண், பெண் இருவர்களின் பாலுணர்வு சம்மந்தமான நோயை சரிசெய்யும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மூட்டுவலியையும் சரிசெய்யக் கூடியது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. எலும்பு தசைகளையும் வலுப்படுத்தக் கூடியது. கட்டுக்கொடியை காலை, மாலை என இருவேளை 2 கிராம் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும். உடல் பொலிவும் பெறும்.