மாங்கொட்டை பருப்பில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...?

மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

உடல் எடைக்குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.
 
உடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது. வயதாகும்போது, உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து, எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம், அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம். இதன்மூலம், கொழுப்பைக் கரைக்கமுடியும்.
 
இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும்.
 
சர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்