மூக்கின் மேற்பகுதியில் உள்ள பிளாக் ஹெட்ஸை நீக்க சில குறிப்புகள் !!

நம் முகம் மற்றும் மூக்கின் மேல் கருப்பாகவும், வெள்ளையாகவும் அப்படி பிதுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நம்முடைய கைகள் சும்மா இருக்காது. ஆனால் எல்லோரும் அதை கையில் தொடக்கூடாது என்பார்கள். ஆனால் இதற்கு சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன.

இதற்கென நோஸ் ட்ரிப்ஸ் கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தி மூக்கின் மேலும் இடுக்குகளிலும் தேங்கியிருக்கும் வெண்புள்ளிகளை நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் அவை சில சமயம் அந்த இடங்களில் சருமத் தடிப்புகளும் அழற்சியும் கூட உண்டாவதுண்டு.
 
எப்படி வெளியேற்றுவது?: தேவையான பொருள்கள் வெந்நீர் மென்மையான துண்டு பிரஷ் லெமன் தூய்மை செய்யும் சிறுகத்தி, உப்பு. மென்மையான துண்டை எடுத்து வைத்திருக்கிறோமே அந்த துண்டை எடுத்து வெந்நீரில் நன்கு நினைத்து அதை அப்படியே வெதுவெதுப்புடன் முகத்தின் மேல் போட்டு மூடிக் கொள்ள வேண்டும்.
 
இது நம்முடைய சருமத் துவாரங்க்ள திறப்பதற்கு உதவி செய்யும். இது நாம் ஸ்கிரப் பயன்படுத்தி வெகுநேரம் தேய்த்த பின் கிடைக்கும் பலனை மிக வேகமாகவே நமக்குக் கொடுக்கும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இப்படி வைத்திருந்தால் போதும்.
 
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு துண்டுகளில் இருந்தும் சிறிதளவு எலுமிச்சை சாறினை பிழிந்து விட்டு, அப்படியே அந்த எலுமிச்சை துண்டுகளின் மீது உப்பினை எடுத்து தூவி விடுங்கள்.
 
ஸ்கிரப்:  இப்படி உப்பு தூவப்பட்ட எலுமிச்சை துண்டுகளை முகம் முழுவதும் குறிப்பாக, வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் இருக்கிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொஞ்சம் அதிகமாகவும் அக்கறை கொண்டு நன்கு வட்ட வடிவில் தேயுங்கள். நன்கு ஸ்கிரப் செய்த பின் காட்டனில் வெதுவெதுப்பான தண்ணீரால் தொட்டு துடைத்துவிட்டு, சுத்தம் செய்யும் கருவி கொண்டு முகம் மற்றும் மூக்குக்கு மேல் உள்ள வெண்புள்ளிகளை வெளியே எடுங்கள். வலி இல்லாமல் ஈஸியாக வெளியேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்