அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்...!

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.
 
# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
 
# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
 
# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.
 
# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்.
 
என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
 
கடுக்காயை விஜயன், அரோகினி, பிருதிவி, அமிர்தமரிதகி, த்ருவிருத்தி என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு்  வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.
 
உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.
 
மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.
 
“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு” 
என்கிறது சித்தர் பாடல். 
 
அதாவது கடுக்காய் உள் இருக்கும் கொட்டை விஷத்தனமை உடையது. சுக்குவின் புறத்தோல் விஷத்தன்மை உடையது என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்