புதினா டீ: புதினா இலைகளில் மெந்தால் மற்றும் மெந்தோபைன் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை தான் சுத்தம் செய்ய உதவுகின்றன. அதோடு இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. எனவே கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் குடியுங்கள். இதனால் கல்லீரலில் உள்ள அழுக்குகளை அன்றாடம் நீக்கிவிடலாம்.
மஞ்சள் டீ: பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் மஞ்சள் சக்தி வாய்ந்த பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த வழிகளுள் ஒன்று.இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சையால் ஆன இந்த டீயில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையைத் தூடும். ஒரு துண்டு இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
சீமைச்சாமந்தி டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இவை மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சீமைச்சாமந்தியை ஒரு டம்ளர் கொதிக்கும் சூடான நீரில் போட்டு மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.