சில நோய்களுக்கு வீட்டு மருத்துவம்

திங்கள், 1 ஜூலை 2013 (19:37 IST)
வயிற்றுக்கடுப்பு

மாமரத்தின் வேர்ப்பட்டயை 50 கிராம் எடுத்து, இடித்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீ விட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடி கட்டி வேளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் வீதம் பருக வேண்டும், இதனால் வயிற்றுக்கடுப்பு விலகும்.மற்றும் ரத்த பேதி, பித்த வாந்தி, பெரும்பாடு ஆகியவை குணமாகும்.

காசம்

கரிசாலை சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் ஆகிய இரண்டையும் சேர்த்து தைலப்பக்குவத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு அரை அல்லது ஒரு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை உட்கொள்ள குணம் தெரியும். வாரத்தில் ஒரு நாள் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.

ஒழுகும் ரணங்கள்

ஊமத்தன் இலைச்சாறு 500கிராம், தேங்கய் எண்ணெய் 200கிராம், மயில் துத்தம் 20 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊமத்தன் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஓரளவு சாறு சுண்டியவுடன் துத்தத்தை பொடித்துச் சேர்த்து தைலத்தை பக்குவமாக வடித்துக் கொள்ளவும். இதை வெளிப்பூச்சாக மட்டும் உபயோகிக்கலாம், காது நோய்க்கு காதில் சில துளிகள் விடலாம்.

குழந்தைகளின் கபம், மாந்தம்

ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கோரோசனை நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப்பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கவும்.

மண்டைக்குத்தல் உடல் வலி:

மிளகாய் 750கிராம், தண்ணீர் 12 லிட்டர், மிளகு 8 கிராம், நல்லெண்ணெய் 175 கிராம், ஆகியவற்றில் மிளகாயைத் தண்ணீரில் சேர்த்து, அடுப்பிலேற்றி ஒன்றரை லிட்டராக சுண்டக்காய்ச்சிக் கொள்ளவேண்டும். தூள் செய்த மிளகுடன் நல்லெண்ணெயைக் கலந்து தைலம் போன்று வடித்து வெளி உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்.

கீல்வாயு

மெருகன் கிழங்கு 200 கிராம், வெள்ளைப்பூண்டு 200 கிராம், ஆமணக்கு எண்ணெய் 200 கிராம், ஆகியவற்றில் மெருகன் கிழங்கின் தோலைச்சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டின் தோலை உரித்து, சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பிறகு இரண்டையும் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து தைலப்பதத்தில் வடித்து மூன்று நாட்களுக்குப் பிறகு உபயோகிக்க வேண்டும், 8லிருந்து 15மிலி வரை காலையில் மட்டும் சாப்பிட வேண்டும்.

குடல் கிருமிகள்

குப்பை மேனி இலை 100 கிராம், ஆமணக்கு எண்ணெய் 400 கிராம் எடுத்துக் கொண்டு எண்ணெயில் இலையைச் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் மிதக்கும் போது இறக்கி, இலைகளை அரைத்து எண்ணெயில் கலந்து கொள்ளவேண்டும், வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளைகள் சாப்பிட குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்