எ‌ளிய கை வை‌த்‌திய முறைக‌ள்

வெள்ளி, 9 ஏப்ரல் 2010 (10:21 IST)
கோடை வெ‌யி‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌விய‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க, ப‌ன்‌னீருட‌ன் ச‌ந்தன‌த்தை‌க் கரை‌த்து ‌விய‌ர்‌க்குரு வ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் தட‌வினா‌ல் ‌விய‌ர்‌க்குரு ‌விரை‌வி‌ல் மறையு‌ம்.

முது‌கி‌ல் வரு‌ம் ‌சி‌ன்ன‌த் ‌சி‌ன்ன‌த் தேம‌ல்களு‌க்கு எ‌ளிய மரு‌ந்து பூ‌ண்டுதா‌ன். பூ‌ண்டை நசு‌க்‌கி தேம‌ல் வ‌ந்த இட‌த்‌தி‌ல் தட‌வினா‌ல் ‌விரை‌வி‌ல் தேம‌ல் மறையு‌ம்.

தலை‌யி‌ல் அ‌திகமான பொடு‌கு ஏ‌ற்ப‌ட்டு அவ‌தி‌ப்படுபவ‌ர்க‌ள், இர‌வி‌ல் வெ‌ந்தய‌த்தை ஊற வை‌த்து காலை‌யி‌ல் அதை அரை‌த்து தலை‌யி‌ல் போ‌ட்டு‌ ஊற‌வி‌ட்டு அல‌சினா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் பெறலா‌ம்.

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை மறையும்.

நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்