நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வாலிபர்: காவல்துறை திணறல்

செவ்வாய், 21 மார்ச் 2017 (16:41 IST)
பெங்களூரு கல்லூரி ஒன்றில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்கள் உள்ளாடைகளை திருடிச் செல்வதாக புகார்கள் வந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக காவல்துறையினர் அந்த வாலிபரை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.



 

 
பெங்களூரு மகாராணி கல்லூரியில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்று விடுகிறாராம். மேலும் அந்த உள்ளாடைகளை அங்கேயே அணிந்து பார்த்து ரசிப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினரால் அந்த வாலிபரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விடுதி மொட்டை மாடியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டது. அதில் அந்த வாலிபர் நிர்வாணமாக வந்து உள்ளாடைகளை எடுத்து அணிந்து ரசிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
 
தன்னை யாரும் பிடித்து விட கூடாது என்பதற்காக அந்த வாலிபர் உடல் முழுவதும் எண்ணெய் பூசி கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை வைத்து அந்த வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்