சமீபகாலமாக இளம் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும், ஒருதலை காதல் விவகாரங்களில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்வதும், ஆசிட் வீசுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகியது. அதில், தனது காதலை ஏற்காத இளம்பெண்ணை ஒரு வாலிபர் கெஞ்சுவதும், பின்னார் அப்பெண்ணை சராமாரியாக அறைவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.