அழகிய பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (18:22 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொபைல் ரீசார்ஜ் கடைகளில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுவதை காவல்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.


 


இந்தியா முழுவதும் பெரும்பாலானோர் தங்களது மொபைல் போன்களுக்கு கடைகளில் சென்றுதான் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். அதில் இளம்பெண்கள் அதிக அளவில் ரீசார்ஜ் கடைகளில் கூடுவது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரேதச மாநிலத்தில் பெண்களுக்கு மொபைல் போன் மூலம் அதிக அளவில் துன்புறுத்தல் ஏற்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உதவி மையம் ஒன்றை அமைத்தார். மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யபட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் இளம் பெண்களின் போன் எண்கள் ரீசார்ஜ் கடைகள் மூலம் வெளியாவதாக தெரியவந்துள்ளது. மேலும் இளம் பெண்களின் மொபைல் எண்களுக்கு ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்