தனியாக இருந்த பெண்ணை தாக்கி திருட முயன்ற இளம் பொறியாளர் ஜோடி - வீடியோ!

வெள்ளி, 10 மார்ச் 2017 (11:10 IST)
ஓசூரில், இளம் ஜோடி ஒன்று தாங்கள் கொண்டு வந்த பையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை  தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

 
இந்த கொள்ளை சம்பவம் குறித்த விவரித்த அப்பகுதி மக்கள், மதியம் 12 மணியளவில் இளம் ஆண் மற்றும் பெண் ஜோடியாக  வந்து விலாசம் கேட்பது போன்று எஅடித்து வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்தனர்.  அந்த பெண்ணின் பயந்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி திருடர்கள் இருவரையும்  பிடித்தனர்.
 
திருடர்கள் வைத்திருந்த பையில் கொறடு, சுத்தி, கையுறை, கயிறு போன்ற ஆயுதங்கள் இருந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் அவர்களை போலீஸில் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்