ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி! தமிழகத்தில் அல்ல, உ.பியில்....

புதன், 5 ஏப்ரல் 2017 (05:30 IST)
வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



 


இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஆனால் எந்த போராட்டமும் செய்யாத உ.பி விவசாயிகளின் ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று லக்னோவில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் உபி முதல்வர் இந்த அறிவிப்பை அதிரடியாக அறிவித்தார். இதனால் உபி மாநில விவசாயிகல் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஒரே அறிவிப்பால் 2 கோடியே 15 லட்சம் விவசாயிகள் நேரடியாக நலம்பெறுவார்கள் என்றும்,7 லட்சம் பேர் மறைமுகமாக பலன்பெறுவார்கள் என்றும் உத்தரப்பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்