15 வயது சிறுமி கொலை: டுவிட்டரில் தவறாக டிரெண்ட் ஆவதால் பரபரப்பு

ஞாயிறு, 5 ஜூலை 2020 (08:30 IST)
விட்டரில் தவறாக டிரெண்ட் ஆவதால் பரபரப்பு
பீகார் மாநிலத்தில் 15 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து டுவிட்டரில் தவறாக ட்ரெண்ட் ஆவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக 15 வயது சிறுமி ஜோதிகுமாரி என்பவர் தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின் இருக்கையில் அமரவைத்து 1200 கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றார்.
 
கிர்கான் என்ற பகுதியில் இருந்து பீகாரில் உள்ள தர்பங்பா என்ற பகுதி வரை தந்தையை அவர் சைக்கிளில் அழைத்து சென்றதாகவும் இதற்கு அவருக்கு ஏழு நாள் பிடித்ததாகவும் கூறப்பட்டது. ஜோதிகுமாரியின் இந்த செயலை கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவானா டிரம்ப் அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். இது குறித்த அவருடைய டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது பீகாரில் ஜோதி சிங் என்ற 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 1200 கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்ற ஜோதிகுமாரிதான் கொல்லப்பட்டதாக டுவிட்டரில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்தான #JusticeForJyoti ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. ஆனால் கொல்லப்பட்ட சிறுமிக்கும், தந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்ற சிறுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பெயர் குழப்பத்தால் டுவிட்டரில் தவறாக டிரெண்டாகி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்