மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்.. கோரிக்கைகளை ஏற்றதாக தகவல்!

சனி, 21 ஜனவரி 2023 (11:29 IST)
மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்.. கோரிக்கைகளை ஏற்றதாக தகவல்!
கடந்த மூன்று நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று தங்களது கோரிக்கைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக் கொண்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இளம் மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக மல்யுத்த வீரர்கள் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஏழு பேர் அடங்கிய குழு ஒன்றை நியமனம் செய்வதாக உறுதி அளித்துள்ளது. 
 
மேலும் இந்த குழுவில் யார் யாரும் இருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து தங்கள் கோரிக்கைகளை மதிய அமைச்சர் அனுராக் பாகூர் அவர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மல்யுத்ஹ்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காக மத்திய அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்றும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்