#WorldHealthDay: மக்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுத்த மோடி!!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:05 IST)
உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 
உலகம் முழுவதும் கொரோனா அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்துள்ளது. அதேபோல உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111லிருந்து 114ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 319லிருந்து 326ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில், இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதால். இத்தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும். நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். உறவினர்களுக்கு மட்டுமின்றி கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்